விஷநீரை குடிநீராக வழங்க திட்டம்.. அடிக்கல் நாட்டிய அப்பாவுவை ரவுண்டு அதிமுக தரப்பு..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடங்குளம் ஊராட்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான உபயோகமின்றி இருக்கும் கல்குவாரியில் உள்ள நீரை சுத்திகரித்து கூடங்குளம் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு குடிநீராக வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம் சுமார் 46 லட்சம் மதிப்பீட்டில் பயனற்று கிடந்த கல்குவாரியில் உள்ள நீரை சுத்திகரித்து கூடங்குளம் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு குடிநீராக வழங்க திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான அனுமதியையும் வழங்கியது.

இந்த நிலையில் கூடங்குளம் ஊராட்சியில் அமைக்க உள்ள சுத்திகரிப்பு நிலைய திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதற்கு அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ராதாபுரம் தொகுதி இருக்கன்துறை கல்குவாரியில் தேங்கியுள்ள வெடி மருந்து கலந்த விஷநீரை பைப்லைன் மூலம் கூடன்குளம் மக்களுக்கு குடிநீராக வழங்க ரூ.46 லட்சத்தில் திட்டமிட்டு அப்பாவு அடிக்கல் நாட்டியுள்ளார். அப்பாவு தன் இருதயத்தை இரும்பு பீரோவில் வைத்து பூட்டி விட்டாரா?" என சபாநாயகர் அப்பாவுவை விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK inbadurai criticized tn assembly speaker appavu


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->