அறப்போர் இயக்கத்தால் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்... கோடி கணக்கில் முறைகேடு.. பாய்ந்தது வழக்கு!
ADMK Ex minister sp velumai Arapor iyakkam
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கும் பணியில் 98.25 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் மீது தேவையான ஆதாரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம், முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணி மீண்டும் சட்டரீதியான சிக்கலில் சிக்கியுள்ளார். அடுத்த கட்ட விசாரணைகள் எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ADMK Ex minister sp velumai Arapor iyakkam