எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் திடீர் ஒத்திவைப்பு!
ADMK EPS Plan change Election Campaign
அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7 ஜூலை 2025 முதல் “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற நோக்குடன் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சார சூறாவளி பயணத்தின் ஒரு பகுதியாக, மூன்றாம் கட்ட சுற்றுப்பயண திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, வரும் 23 ஆம் தேதி சனிக்கிழமை சோழிங்கநல்லூர் மற்றும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற இருந்த பயணம் முன்னதாக திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது அந்த இரண்டு தொகுதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்றிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK EPS Plan change Election Campaign