எடப்பாடி பழனிசாமியை சந்தித்த 7.5% உள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்ற மாணவர்கள்!
ADMK EPS NEET 7 point 5 reservation students meet
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அரசுபள்ளிகளில் பயின்று 7.5% உள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்ற மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுகுறித்து அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசுபள்ளிகளில் பயின்று 7.5% உள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்ற கூலித் தொழில் மற்றும் நெசவுத் தொழில் செய்வோரின் பிள்ளைகளான திவ்யதர்ஷினி, அக்ஷயா, சவிதா, மஞ்சுளா, கோகிலா, சுதர்சன், ஹரிப்பிரியன் மற்றும் பிரசன்ன குமார் ஆகிய 8 மாணவ மாணவியர் நேரில் சந்தித்து,
தங்கள் மருத்துவக் கனவை நனவாக்கிய 7.5% உள் இடஒதுக்கீட்டை அளித்த மாண்புமிகு புரட்சித் தமிழர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து, வாழ்த்து பெற்றனர்.
English Summary
ADMK EPS NEET 7 point 5 reservation students meet