ஆம்ஸ்ட்ராங் கொலை: எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
ADMK EPS Armstrong murder case
சென்னை ராயபுரத்தில் தேர்தல் பிரச்சத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, "திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் அவர்கள், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வீடியோ மூலமாகவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வளவு எச்சரிக்கைகளுக்குப் பிறகும், அவருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கத் தவறிய இந்த விடியா திமுக அரசின் அலட்சியத்தால் அவர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக அரசு, சாமானிய மக்களை எப்படி பாதுகாக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுக ஆட்சி அமைந்ததும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
English Summary
ADMK EPS Armstrong murder case