அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன? இபிஎஸ் பரபரப்பு பேட்டி!
ADMK Edappadi Palaniswami BJP Alliance
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாய கடன்கள், கூட்டணி அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார்.
விவசாயிகள் சிபில் ஸ்கோர் காரணமாக கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்ற புகாரை வைத்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் மனு அளித்ததாக அவர் தெரிவித்தார். அதன் பின்னர், சிபில் ஸ்கோர் விதிமுறையை தற்காலிகமாக நிறுத்தி, பழைய நடைமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் கூறினார். இதன் மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மறுபடியும் பயனடைவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க உள்ளதாகவும், பா.ஜ.க கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் கூறினார். யார் சேருவார்கள் என்ற விபரம் அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் சூழ்நிலையைக் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன; இதில் எதுவும் நடக்கலாம் என்றும், த.வெ.க. கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையோ என்பதையும் காலமே தீர்மானிக்கும் எனத் தெரிவித்தார்.
English Summary
ADMK Edappadi Palaniswami BJP Alliance