அதிமுக கூட்டணியில் திமுக கூட்டணி கட்சி? என்னதான் பிளான்! எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!
ADMK Edappadi palanisamy Alliance election 2026
அரசியல் சூழ்நிலை அடிப்படையில் தேர்தல் கூட்டணிகள் மாறுபடுகின்றன. 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனால், திமுக அரசை வீழ்த்தும் நோக்குடன் ஒத்த நோக்குடைய கட்சிகளை ஒன்றிணைப்பதே அதிமுகவின் திட்டம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
மேலும் அவரின் பேட்டியின் விவரம் பின்வருமாறு: பாஜக ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கே உரிய பலம் இருக்கிறது. திமுகவின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக ஒத்த எண்ணக்கூறுகளுடன் செயல்பட விரும்பும் எந்தக் கட்சியையும் வரவேற்க அதிமுக தயார்.
நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி (கம்னியூஸ்ட்) கட்சிகள் போன்றோருடன் நாங்கள் கூட்டணி வைக்க முயற்சிக்கவில்லை. ஆனால், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ஒருங்கிணைந்து செயல்பட விரும்புவோர் எங்களை அணுகலாம். அதில் தவறு ஏதுமில்லை என்றார்.
மேலும், அண்ணாமலை தலைமையிலான பாஜகவுடனான உறவு குறித்து கேட்கப்பட்டபோது, மற்ற கட்சிகளின் உள்ளமைப்பில் தலையிடுவது அதிமுகவின் பழக்கம் அல்ல என்றார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அதிமுக இன்று துடிப்புடன் செயல்படும் நிலைமையில் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு குறித்து தெரிவிக்கையில், கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியுடன் முதலமைச்சராகி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஸ்டாலினை விட, மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவுக்கு சட்டம் ஒழுங்கு குறித்து குரல் எழுப்ப அதிக உரிமை உண்டு.
திறமையற்ற திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மவுனமாக இருக்க நாங்கள் என்ன அவர்களின் கூட்டணி கட்சியா? என்று பதிலடி கொடுத்து பேட்டியளித்துள்ளார்.
English Summary
ADMK Edappadi palanisamy Alliance election 2026