பரபரப்புக்கு மத்தியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நான்கு மணிக்கு, அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் கிளை அமைப்புகளைப் பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக பாஜகவுடனான கூட்டணி முறிவை அறிவித்த பிறகு தனது கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk districts secaretaries meeting today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->