வீதிக்கு வீதி கொலை,கொள்ளை,வழிப்பறி... தமிழ்நாடெங்கும் ரவுடிகளின் ஆதிக்கம் - அதிமுக கடும் கண்டனம்!
ADMK Condemn to DMK MK Stalin
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்பவர் மர்மகும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை.
திருவள்ளூர்: வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மர்மகும்பல்.
கடலூர்: மனிதக் கறி கேட்டு உரிமையாளரை தாக்கி,உணவகத்தை சூறையாடிய போதை ஆசாமிகள்.
புதுக்கோட்டை : இன்பரசன் என்ற இளைஞர் வெட்டிக் கொலை.
இப்படி வீதிக்கு வீதி கொலை,கொள்ளை,வழிப்பறி...
தமிழ்நாடெங்கும் ரவுடிகளின் ஆதிக்கம்!
முக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் கொலைக் களமாகவும் ரவுடிகளின் தலைமையிடமாகவும் மாறும் தமிழ்நாடு" என்று விமர்சித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin