இது தான் ஆட்சி நிர்வாகம் செய்யும் லட்சணமா முக ஸ்டாலின் அவர்களே? அதிமுக கேள்வி!
ADMK Condemn to DMK MK Stalin
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்து விட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இதே சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமாரின் கொடூரக் காவல் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன் பிறகாவது காவல்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதல்வர் காவல்துறையை சீர்படுத்தினாரா? என்றால், இல்லவே இல்லை!
திமுக ஆட்சியில் நடந்த ஏறத்தாழ 30 காவல் மரணங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் இந்த பொம்மை முதலமைச்சர் தானே?
ஒன்று சட்டம் ஒழுங்கை கைவிடுவது, அல்லது, சட்டத்தை மீறி வன்முறையைக் கையாள்வது, இது தான் ஆட்சி நிர்வாகம் செய்யும் லட்சணமா முக ஸ்டாலின் அவர்களே?
அதுவும், காவல்துறையினர் அந்த இளைஞரை சமூகத்தின் பெயரை சொல்லியே அடித்ததாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வருகின்றன.
தாங்கள் தான் சமூகநீதி-க்கு Patent வைத்திருப்பது போல் பேசும் திமுக நடத்தும் ஆட்சியில், எளிய தலித் மக்களுக்கு கிடைக்கும் மரியாதை என்ன? பாதுகாப்பு என்ன? உங்கள் அரசின் காவல்துறையே இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமையை அரங்கேற்றி, அதனால் ஒரு உயிர் பறிபோய் இருப்பதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் பொம்மை முதல்வரே?
தற்போது வரை திமுக அரசு, காவல்துறை, அமைச்சர் ஆகியோரின் சப்பைக் கட்டுகளை ஏற்காமல் உறவினர்கள் இரவு முழுவதும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகாஷ் மரணத்தின் மீது நியாயமான நீதி விசாரணை நடைபெற்று, தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin