இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்" என்பதே ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் போக்கு - அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "யூடியூபர் மாரிதாஸ் அவர்களை ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

"இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்" என்பதே ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் போக்காக இருந்து வருகிறது.

அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் கருத்துகளுக்கு கைது தான் பதில் என்றால், இதற்கு பெயர் பாசிசம் அல்லாமல் வேறு என்ன?

இன்று மாலை 6 மணிக்கு, #KarurTragedy தொடர்பாக திமுக நடத்திய நாடகம் ஒன்றைக் காணொளியாகப் பதிவிடுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் எதையேனும் உண்மையை சொல்லிவிடப் போகிறார் என்று பயந்து தான் அவசர அவசரமாக கைது செய்துள்ளதா ஸ்டாலின் அரசு? அப்படி என்ன உண்மையைக் கண்டு இவ்வளவு அஞ்சுகிறது இந்த அரசு?

கிட்னி திருட்டில் தொடர்புள்ள உங்கள் கட்சி MLA, தனது ரோல்ஸ் ராய்ஸ் காருடன் கிட்னி திருட்டை ஒப்பிட்டு நக்கலாக பேசும் அளவிற்கு ஆளுங்கட்சி சார்ந்தோர் குற்றங்கள் மீது கொஞ்சம் கூட நடவடிக்கை எடுக்கமால், காப்பாற்றும் முயற்சிகளில் தான் ஈடுபடுகிறது திமுக அரசு. ஏனெனில், கிட்னி திருட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அமைத்த SIT-க்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

ஆனால், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை உதிர்த்தாலே முழுவீச்சில் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன்?

2026 சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் அடையப்போகும் தோல்வியை திமுக அரசு இப்போதே நன்றாக உணர்ந்துவிட்டது.

உடனடியாக மாரிதாஸ் அவர்களை விடுதலை செய்வதுடன், ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் பாசிசப் போக்கை கைவிடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட மாறிடாஸ் 4 மணிநேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK Govt Maridoss arrest


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->