இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்கா டல்லாஸில் சுட்டுக்கொலை..!
Indian dentist shot dead in America
இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் அமெரிக்காவின் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயதான சந்திரசேகர் போலே என்பவர், பல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மேல் படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். 06 மாதங்களுக்கு முன்பே முதுநிலைப் படிப்பை முடித்த சந்திரசேகர், வேலைக்காக அங்கேயே வசித்து வந்துள்ளதோடு, அங்குள்ள கேஸ் ஸ்டேஷனில் பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு டல்லாஸ் நகரில் உள்ள ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த சந்திரசேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சந்திரசேகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Indian dentist shot dead in America