அருவியில் குளித்துக் கொண்டிருந்த கேரளா மாணவிக்கு பாலியல் தொல்லை: தமிழக வாலிபர் கைது..!
Tamil Nadu youth arrested for sexually harassing Kerala student who was bathing in waterfall
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் குறித்த மாணவி உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அருகே குளித்துக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் குறித்த வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் போலீசார் அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையில் அவர் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த 32 வயதான மாரிசெல்வம் என்பதும், அங்கு ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாரிசெல்வம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
English Summary
Tamil Nadu youth arrested for sexually harassing Kerala student who was bathing in waterfall