ஜார்க்கண்டில் பயங்கரம்: துர்கா சிலை கரைக்க சென்ற இடத்தில் மோதல்: 07 பேருக்கு கத்திக்குத்து..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று முன் தினம் நவராத்திரி விழாவின் இறுதி நாளான தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. விஜயதசமிக்கு மறுநாளான நேற்று வட மாநிலங்களில் துர்கா சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. 

இவ்வாறு ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் மாவட்டம் ஹரிஜன் பகுதியை சேர்ந்த சிலர் அப்பகுதியில் உள்ள நீர்நிலையில் துர்கா சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் சிலையை கரைத்து விட்டு அதே வழியில் திரும்பி வந்தபோது இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது கத்திக்குத்துக்கு ஆளான 07 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 people stabbed in clash at Durga idol immersion site in Jharkhand


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->