மோசடி வழக்கில் நாடு கடத்தப்படும் நீரவ் மோடி: இந்தியா கொடுத்துள்ள உத்தரவாதம்..! - Seithipunal
Seithipunal


பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி வங்கி பண மோசடி வழக்கில் நாடு கடத்தப்பட இருக்கும் நிலையில், அவரிடம் புதிதாக எந்த விசாரணையும் நடத்தப்பட மாட்டாது என்று பிரிட்டனிடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498.20 கோடி கடனை பெற்று, அதனை திருப்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். சி.பி.ஐ., அளித்த புகாரின் பேரில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேண்ட்ஸ்வெர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாகக் கூறி, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, நீரவ் மோடி 10 முறை தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதனிடையே, கடந்த மாதம் தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீரவ் மோடி, பிரிட்டன் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவில், இந்திய விசாரணை அமைப்புகள் விசாரணை என்ற பெயரில் தன்னை சித்ரவதை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இதனால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு குறித்தான விசாரணை வரும் நவம்பர் 23ம் தேதி வரவுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகார் தொடர்பாக நீரவ் மோடியிடம் புதிதாக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்றும், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையே தொடரும் என்று இந்தியா தரப்பில் பிரிட்டனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து நீரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் மும்பையில் உள்ள ஆர்தர் சாலையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் பிரிட்டன் அதிகாரிகள் நீரவ் மோடி அடைக்கப்பட இருக்கும் ஜெயிலில் ஆய்வு செய்தனர்.

இதற்கு முன்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டார். இதே மாதிரியான உத்தரவாதத்தை இந்தியா அளித்திருந்ததது. அதாவது, தனிமைச் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்றும், சர்வதேச தரத்திலான ஜெயிலில் தான் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India gives guarantee to Nirav Modi who is being extradited in a fraud case


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->