முதல் முறையாக இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர்..! - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 08-ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு வருகை தருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் வருகை தரும் பிரிட்டன்  பிரதமர் ஸ்டார்மரின் முதல் இந்திய பயணம் இதுவாகும். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் அக்டோபர் 08, 09-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வார்.

இரண்டு நாள் பயணத்தின் போது, ​​வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

அக்டோபர் 09-ஆம் தேதி மும்பையில், மோடியும், ஸ்டார்மரும் தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம். பிரதமர் மோடியும், ஸ்டார்மரும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இரு பிரதமர்களும் மும்பையில் நடைபெறும் 06வது உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவில் கலந்து கொண்டு, முக்கிய உரைகளை நிகழ்த்தி இருக்கின்றனர்.' என்றுஅளிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

British Prime Minister Keir Starmer will visit India on October 8 report


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->