கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுதலை..நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த கடந்த சனிக்கிழமை  பிரசாரம் மேற்கொண்டபோது  கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. 

கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார். இந்தநிலையில்,

 இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம், தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் , தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 22 பேரை தேடி வருகிறார்கள். முன்னதாக இதே விவகராம் தொடர்பாக யூடியூபர் பெனிக்ஸ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர் .

இந்நிலையில், விசாரணைக்குப்பின் மாரிதாஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜர் ஆக வேண்டும் என்று மாரிதாசுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Freedom for the arrested YouTuber Marithas what happened?


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->