ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!
Former Jammi kasmir CM Farooq Abdullah hospitalised
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா (87) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், இன்று (அக்.4) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தேவையான சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் ஃபரூக் அப்துல்லா இன்னும் இரண்டு நாள்களுக்குள் வீடு திரும்புவார் என அவரது கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Former Jammi kasmir CM Farooq Abdullah hospitalised