களத்தில் இறங்கிய ஓபிஎஸ்.. வெளியாகப் போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதில், பெரும்பாலான ஊரக உள்ளாட்சிகளை திமுக கைப்பற்றியது. 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 646 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்தில் இதுகுறித்து அனைத்து கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் கூடியது. அப்போது ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

இதனைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான விருப்ப மனுக்களை அளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளர்கள் பெற்றுள்ளனர். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பெறப்பட்டுள்ளது. அவற்றில் உரிய தகுதியான விருப்ப மனுக்களை தேர்வு செய்து நேர்காணல் நடத்தும் பணியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேனிலும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்திலும் தற்போது நேர்காணலை நடத்தி வருகின்றனர். இதர மாவட்ட செயலாளர்கள் தகுதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்கள் இறுதி செய்து, அதில் ஒருவரை தலைமை ஒப்புதலுடன் வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்து, அதன்படி தேர்வு நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK candidates election going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->