சின்னம்மா சிறையில் இருந்து வெளியே வந்ததும், தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.. அதிமுக முன்னாள் அமைச்சர்.!!
admk anwhar raajhaa says about sasikala
சின்னம்மா சிறையில் இருந்து வெளியே வந்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். இதையடுத்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளருமான அன்வர்ராஜா கலந்து கொண்டார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சின்னம்மா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுப்பார் என்பதை பொருத்துதான் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என கூறினார்.
சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது அதிமுக மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
admk anwhar raajhaa says about sasikala