நான் யாரை சொன்னேன்னு அவர்களுக்கு தெரியும்! அவர்களை அப்படிதான் சொல்ல வேண்டும் - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகையும், அரசியல் குறித்து பேசி வருபவருமான கஸ்தூரி பேசுகையில், "சுமார் 300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். 

இன்னைக்கு அவர்கள் வந்து தமிழகர்கள் என சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க? அதனால்தான் உள்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள்" எனப் பேசினார். 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்தார்.

அதில், "நான் பேசும்போது ஒரு சமூகத்தை தவறாக எதுவும் சொல்லவில்லை. அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றுதான் பேசினேன். பிராமண சமூகத்தை ஒவ்வொரு நாளும் விமர்சிக்கும் போதெல்லாம் எல்லோரும் எங்கே போனார்கள்?

ஒரு சமூகத்தை தமிழர்கள் இல்லை என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடமும்’ என்று போஸ்டர் அடித்து பரப்பியவர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களா? 

அவர்கள் தாய்மொழியை தமிழாக கொண்டவர்களா? இல்லை. தமிழக அமைச்சரவையில் பிராமணர்கள் இருக்கவே கூடாது என்று சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தமிழர்களுக்கு மட்டும்தான் இந்தமுறை அமைச்சரவையில் இடம் கொடுக்கப்போகிறோம் என்று ஏன் சொல்லவில்லை?

பிராமணர்கள் மீது மட்டும் ஏன் இந்த வன்மம்? பிராமணர்களுக்கு நடக்கக்கூடிய அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறேன். தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக பரப்பப்படும் பொய்யை யாரும் நம்ப வேண்டாம். எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. உண்மையில் தெலுங்கை மக்கள் என் பேச்சால் புண்பட்டு இருந்தான் அதற்க்கு நான் வருந்துகிறேன். 

ஆனால், நான் நேற்று சொன்னது யாரை என்று அவர்களுக்கே தெரியும். அவர்களை அப்படிதான் சொல்ல வேண்டும். வீட்டில் தெலுங்கை பேசிக்கொண்டு வெளியில் நான் தமிழன் என்று கூறி, வாக்கு வாங்கி, பிராமிணர்களை தமிழர்கள் என்று சொல்பவர்களுக்கு தெரியும்" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்தார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Kasturi Say about DMK DK Dravidian


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->