சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 15-வது நாள்... 9 அம்ச கோரிக்கைகள் குறித்து இன்று அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை....!
15th day Chennai sanitation workers protest Ministers group discuss 9 point demands today
அம்ச கோரிக்கைகள் குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நீண்ட நாட்களாக தொடரும் போராட்டத்துக்கு தீர்வு காணும் நோக்கில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், போராசென்னையின் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் கவனம் பெற்றுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நேற்று விவாதம் நடைபெற்றது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.அப்போது, ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை இடம்பெற்றிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசிய தற்போதைய முதல்-அமைச்சர், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை நேரடியாகச் சந்திக்காதது ஏன் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மேலும், முந்தைய சட்டப்பேரவை அமர்வில் விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தபோதும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ராஜ்மோகன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் சிரமங்களை அரசு நன்கு உணர்ந்துள்ளதாக தெரிவித்தார்.தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான அரசு ஆவணங்கள் தயாராக உள்ளதாகவும், முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நிர்வாகச் சிக்கல்களுடன் கடுமையான நிதிச்சுமையும் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை தனது அறைக்கு இருமுறை அழைத்து, ஒவ்வொரு முறையும் மூன்றரை மணி நேரம் வரை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.முந்தைய ஆட்சிக் காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் 100 முதல் 150 நாட்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.அமைச்சரின் பதிலுக்குப் பின்னர் மீண்டும் பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்களது ஆட்சிக் காலத்தில் அன்றைய அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் போராட்டக் களத்திற்கே சென்று தொழிலாளர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
முந்தைய ஆட்சியில் 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றதை சுட்டிக்காட்டும் அரசு, தற்போதைய போராட்டமும் 100 நாட்களை கடக்கும் வரை காத்திருக்கப் போகிறதா என அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தேவையான அரசு ஆவணங்கள் அனைத்தும் தயாராகிவிட்டதாகவும், தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் அடுத்தகட்ட முயற்சியாக இன்று அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழு, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
15 நாட்களாக தொடரும் போராட்டம், சட்டப்பேரவையில் எழுந்த விவாதம் என பரபரப்பு நீடித்து வரும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒன்பது அம்ச கோரிக்கைகளுக்கு சாதகமான முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
15th day Chennai sanitation workers protest Ministers group discuss 9 point demands today