ஜனநாயகன் லீக்: கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் - ரஜினிகாந்த்!
Actor rajinikanth condemn for vijay jananayagan leak
நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தின் கடைசி படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைத் துறையின் கெடுபிடிகளால் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது முழுப்படமும் இணையத்தில் கசிந்துள்ள விவகாரம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படக்குழுவினரின் பல மாத உழைப்பு இத்தகைய சட்டவிரோதச் செயல்களால் சிதைக்கப்படுவதைக் கண்டு, இயக்குனர் விஜய் ஆண்டனி, சுரேஷ் காமாட்சி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள கண்டன செய்தியில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Actor rajinikanth condemn for vijay jananayagan leak