என் தோல்விக்கு அதிமுக கூட்டணி கட்சி தான் காரணம்! உண்மையை போட்டு உடைத்த ஏ.சி. சண்முகம்!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போது வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா சட்டவிரோதமாக தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. பின்னர் இந்திய ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூர் காண தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். 

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார். மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் திமுகவுக்கு இது தோல்வியை என்றும், அதிமுகவின் வெற்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இந்நிலையில், என் தோல்விக்கு பாஜக தான் காரணம் என ஏ.சி. சண்முகம் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் வேலூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் தோல்வி அடைந்ததற்கு முத்தலாக் தடை சட்டமும், ஜம்மு காஷ்மீரின் 370 வது சட்டப்பிரிவு நீக்கியதும் தான் காரணம் என கூறினார். 

இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியதை இஸ்லாமியர்கள் வரவேற்கின்றனர் என்றும் அதிமுக தோல்விக்கு பாஜக காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AC Shanmugam says bjp


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal