அதிகார துஷ்பிரயோகமா...? இந்த நிமிஷமே அழிச்சிடுங்க...! - எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய்!
Abuse power Destroy this very moment Chief Minister Vijay warns
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், தனது ஆட்சியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மக்கள் பணம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள், அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

உணர்ச்சியும் உறுதியும் கலந்த குரலில் பேசிய விஜய், “மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இந்த விஜய் தவறு செய்ய மாட்டான்; தவறு செய்யவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி” என்று கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்தார்.
மேலும், “என்னுடன் இருப்பவர்கள் என்பதற்காக யாருக்கும் தனி சலுகை கிடையாது. ‘நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம், இனி எதை வேண்டுமானாலும் செய்யலாம்’ என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால், அந்த எண்ணத்தை இந்த நிமிஷமே மனதில் இருந்து அழித்துவிடுங்கள்” என்று அதிரடியாக தெரிவித்தார்.
விஜய்யின் இந்த பேச்சு, ஆட்சியில் ஒழுக்கமும் வெளிப்படைத்தன்மையும் நிலைநிறுத்தப்படும் என்ற வலுவான அரசியல் அறிக்கையாக பார்க்கப்படுகிறது.
அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்த நிலையில், அவரது வார்த்தைகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகின்றன.
English Summary
Abuse power Destroy this very moment Chief Minister Vijay warns