‘கோட்-சூட்-போட்டோஷூட்’ மாடல் ஆட்சியை கைவிடுங்கள்! வேலியே பயிரை மேயும் கொடூரம்... பொய்க்கால் குதிரை அரசு என இபிஎஸ் கடும் தாக்கு...! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் தமிழக சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"சென்னை கோடம்பாக்கம் பகுதியில் காவலர் உட்பட மூவர், சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன.

தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்ற அந்த சிறுவன், டி.வி. ரிமோட்டால் காவலரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கே நடந்துசென்று புகார் அளித்ததாக வெளியாகும் செய்திகள் தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களின் கொடூர தன்மை பொதுமக்களிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.தமிழக முதல்-அமைச்சரே, தேர்தல் காலத்தில் குழந்தைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரித்த நீங்கள், இன்று அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கும் நிலைக்கு என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்?

‘சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் வெறும் சம்பிரதாய நடவடிக்கைகளாக மட்டுமே மாறிவிட்டதோ என்ற சந்தேகம் மக்களிடையே வலுப்பெற்று வருகிறது.

பாதுகாப்பு வழங்க வேண்டிய அமைப்புகளிலிருந்தே இத்தகைய கொடூரங்கள் நிகழ்வது உங்களின் மனசாட்சியை உலுக்கவில்லையா? இந்த மனிதநேயமற்ற சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், ‘கோட்-சூட்-போட்டோஷூட்’ அரசியல் பாணியை கைவிட்டு, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உணர்வுப்பூர்வமான நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abandon coat suit photoshoot model government fence itself cruel thing that grazes crops EPS strongly attacks government false horse


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->