"ஒரு எம்.பி பஞ்சாயத்து தலைவர் போல வர முடியாது".!! ஜோதிமணியின் பேச்சால் சலசலப்பு.!! - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் மூக்கனாங்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கரூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டார். இப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் தேர்தலின் போது மட்டும் தொகுதி பக்கம் வருவதாகவும், மற்ற நேரங்களில் அவரை தொடர்பு கொள்ள கூட முடியவில்லை எனவும் குற்றம் சாட்டை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கேள்வி எழுப்பிய நபரிடம் "நான் சொல்றத முதலில் கேளுங்க. ஒரு எம்பி பஞ்சாயத்து பிரசிடெண்ட் போல அடிக்கடி வர முடியாது" என ஜோதிமணி எம்.பி பேசியதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேள்வி எழுப்பிய நபரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர் இருப்பினும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்ததால் அங்கிருந்த மக்கள் கேள்வி எழுப்பிய நபரை கிராம சபை கூட்டத்தில் இருந்து அழைத்து சென்றனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு தோற்றுக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Man argue with Jyothimani MP who attended Gram Sabha meeting


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->