2026 தமிழக சட்டசபை தேர்தல்: மீண்டும் திமுக தானா? ஸ்டாலின் - இபிஎஸ் - அமித்ஷா - விஜய் கட்டத்தின் ரகசியம்! ஜோதிடர் கணிப்பு - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் எளிதான ஒன்றாக இருக்காது என்றும், இது “ராகு – சூரியன்” மோதலாக மாறும் என்றும் பிரபல ஜோதிடர் பிரதோஷ் கணித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலைப் பார்த்தால், 2026 தேர்தல் நான்கு முனைப் போட்டியாக மாற வாய்ப்புள்ளதாக பிரதோஷ் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் தலைமையிலான தவெக – இந்த நான்கு சக்திகளும் தேர்தல் களத்தில் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ச்சியாக இரண்டு பதிவுகள் வெளியிட்டுள்ள ஜோதிடர் பிரதோஷ், ஒவ்வொரு தலைவரின் ராசி, கிரக நிலை அடிப்படையில் கணிப்புகளை முன்வைத்துள்ளார். அவரது கணிப்புப்படி, முதல்வர் ஸ்டாலின் சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியைச் சேர்ந்தவர் என்பதால், தற்போது அவரின் கிரக நிலை மிகவும் வலுவாக உள்ளது. சிம்ம ராசிக்கு 11ஆம் இடத்தில் இருக்கும் குரு மக்கள் ஆதரவு, அமைப்பு வலிமை மற்றும் அரசியல் பலத்தை குறிக்கிறது. மேலும், 6ஆம் அதிபதி 8ஆம் இடத்தில் இருப்பது “விபரீத ராஜயோகம்” எனவும், நெருக்கடிகளை கடந்து வெற்றியைத் தரும் அமைப்பு எனவும் அவர் விளக்குகிறார்.

ராகுவின் மீது குருவின் பார்வை சாதகமாக இருப்பதால், சிம்ம ராசி தற்போது பலமான நிலையில் இருப்பதாகவும், திமுக தலைமையான மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரின் ஜாதகங்களும் வலுவாக இருப்பதாகவும் பிரதோஷ் கூறுகிறார். “அனைத்து கிரகங்களுக்கும் ராஜா சூரியன். சூரியனை வீழ்த்துவது எளிதான விஷயம் அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், சூரியனை எதிர்க்கும் சக்தி ராகுவிடமே இருப்பதாகவும், அந்த ராகு சக்தி அமித் ஷாவிடம் வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ராகு மட்டும் போதாது; குருவின் ஆசீர்வாதமும், சுக்ரனின் இணைப்பும் தேவை. அந்த ‘சுக்ரன் யார்?’ என்பது விரைவில் வெளிப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, தவெக கடக ராசியைச் சார்ந்ததாகவும், விஜயின் முழுமையான பிறந்த விவரங்கள் தெரியாததால் இறுதி முடிவுக்கு வர முடியவில்லை என்றும் பிரதோஷ் கூறியுள்ளார். இருப்பினும், “தவெகவை குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று அவர் தெளிவாக எச்சரித்துள்ளார்.

மற்றொரு பதிவில், 2026 சட்டசபை தேர்தல் ஜோதிட ரீதியாக மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் பிரதோஷ் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி அமையும் சாத்தியம் அதிகம் என்றும் அவர் கணித்துள்ளார். திமுக (சிம்மம் – சூரியன்) வலுவாகத் தெரிகிறது என்றாலும், அமித் ஷாவின் ராகு சாணக்கிய சக்தி, எடப்பாடி பழனிச்சாமி உருவாக்க வேண்டிய பெரிய கூட்டணி ஆகியவை தேர்தல் முடிவில் முக்கிய பங்காற்றும் என கூறியுள்ளார்.

மொத்தத்தில், 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சாதாரண அரசியல் மோதலாக இல்லாமல், கிரக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு “மெகா திரில்லர்” ஆக இருக்கும் என்று ஜோதிடர் பிரதோஷின் கணிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2026 Tamil Nadu Assembly Elections Will DMK win again Stalin EPS Amit Shah The secret of Vijay phase Astrologer prediction


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->