திமுக - இந்திய கம்யூனிஸ்ட்: பிப். 27-ல் தொடங்குகிறது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!
2026 Election CPI Names 4 Member Panel for Seat Sharing Talks
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக் குழு விவரம்:
மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் பின்வரும் 4 முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்:
மு. வீரபாண்டியன் (குழுத் தலைவர்)
இரா. முத்தரசன்
கே. சுப்பராயன் எம்.பி.
கோ. பழனிசாமி
எஸ். கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தைக் குழு குறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் குழு வரும் பிப்ரவரி 27, 2026 அன்று திமுக குழுவுடன் தனது முதற்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது.
ஏற்கனவே மதிமுக, மமக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுடன் திமுக தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், இடதுசாரிகளுடனான இந்தப் பேச்சுவார்த்தை கூட்டணியின் பலத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
2026 Election CPI Names 4 Member Panel for Seat Sharing Talks