சட்டப்பேரவையில் பரபரப்பு...! 'முதல்வருக்கு மரியாதை எங்கே'...? - உதயநிதி ஸ்டாலின் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


சட்டசபையில் முதலமைச்சர் விஜய் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் அமர்ந்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியதால், சட்டசபையில் திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்து சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்துகொள்வது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது,"சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்துகொள்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

தற்போதைய சட்டசபையில் நாங்கள் அனைவரும் புதியவர்கள் என்பதால், சட்டசபையின் நடைமுறைகளையும், மரபுகளையும் முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம்.அதே நேரத்தில், சட்டசபையில் கண்ணியமாக நடந்து கொள்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அறிவுறுத்த வேண்டும்.எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதல்-அமைச்சர் சட்டசபைக்கு வரும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நிற்கிறோம்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்குள் வரும்போது எழுந்து நிற்காமல் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரும் சட்டசபையின் மரபையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும்" என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

அமைச்சர் ரமேஷின் இந்தப் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நேரு விளக்கம் அளித்துப் பேசுகையில், முதலமைச்சர் சட்டசபைக்குள் வரும்போது எழுந்து நிற்பது என்பது குற்றமோ, குறையோ கிடையாது. அது அவரவர் கடைப்பிடிக்கும் நடைமுறையைப் பொறுத்தது.

திமுக ஆட்சியில் இருந்தபோதும் முதலமைச்சர் சட்டசபைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றது இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்த விதிமுறையும் இல்லை. எனவே, இதை கண்ணியக் குறைபாடாகக் கருத முடியாது" என நேரு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Legislative Assembly Where respect Chief Minister Minister Ramesh accuses Udhayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->