ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்.? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்டியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில கட்சிகள் கூட்டணி அமைத்து, சில கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளனர். 

இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கருத்து கணிப்பை ஏபிபி-சிவோட்டர் நடத்தியது, அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

கேரளா சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு: 

கேரளா சட்டசபை தேர்தலில் இடதுமுன்னணி  ஆட்சியை தக்க வைக்கும்; 81-89 இடங்கள்

கேரளா தேர்தலில் காங். கூட்டணிக்கு 49 முதல் 57 இடங்கள்

கேரளா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு: 

பாஜக கூட்டணி 73 முதல் 81 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி 36 முதல் 44 இடங்கள்

ஏ.ஐ.டி.யூ.எப் 5 முதல் 9 இடங்கள்

இதர கட்சிகள் 0 முதல் 4 இடங்களில் வெல்லும். 

மே.வங்கம் சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு: 

மேற்கு வங்கத்தில் மமதா ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.

மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் 154- 162 இடங்கள்

பாஜக 98-106 இடங்கள்

காங்-இடதுசாரிகள் 26- 34 இடங்கள் கிடைக்கும்

இதர கட்சிகள் 2 முதல் 6 இடங்கள் வெல்லும்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு: 

திமுக- காங்கிரஸ் அணி 12 முதல் 16 இடங்கள் (42.6% வாக்குகள்)

அதிமுக அணி 14 முதல் 18 இடங்கள் (44.4% வாக்குகள்)

மநீம- 2.3% வாக்குகள் கிடைக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2021 assembly election poll results


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->