என்னது! பரிகாரம் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுமா?
Will physical health improve through remedy
நமது உடல்நலம் நன்றாக இருக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் நம்மிடம் இருந்தாலும், நீண்ட காலம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கொடிய வியாதிகள் ஏதும் நம்மை அண்டாமல் இருக்க நமக்கு பூர்வ ஜென்ம புண்ணியமும், இறைவனின் அருளாசிகளும் வேண்டும். ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கொடிய வியாதிகளும் ஏதும் நம்மை அண்டாமல் இருப்பதற்கான பரிகாரங்கள்.

உலகில் பிறந்த எந்த ஒரு மனிதரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு நோய், வியாதி பாதிப்புகளை அனுபவிக்காமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை. எல்லா வியாதிகளையும் அது ஏற்படுவதற்கு முன்பே தடுக்கவும், அப்படியே ஏற்பட்டாலும் அதை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இருந்தாலும், சில வகையான வியாதிகள் ஒருவருக்கு ஏற்பட அவர்களின் கர்ம வினைகளே காரணம் என்பது ஆன்மீக பெரியோர்களின் கருத்தாகும்.
அந்த வகையான நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான சில ஆன்மீக வழிமுறைகளையும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.நமது உடலில் நோய் நொடிகள் ஏதும் அண்டாமல் இருக்க தினந்தோறும் இரவு சீக்கிரமாக தூங்கி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக துயிலெழுந்து, சிறிது நேரம் தியானம் செய்து உங்களின் இஷ்ட தெய்வம், உங்களின் முன்னோர்கள் மற்றும் சித்தர்கள், முனிவர்களை மானசீகமாக வணங்க வேண்டும்.
சூரிய பகவான் ஒரு மனிதனின் முழு உடல்நலத்திற்கும் காரகனாகிறார். அதிகாலையில் நீராடி காலையில் உதிக்கின்ற சூரிய பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை வழிபட்டு வர வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரம் இருக்கும் கோவிலுக்கு காலை நேரத்தில் சென்று இறைவனை வழிபட்டு, பின்பு அரசமரத்தை சுற்றிவருவது உங்களின் உடலில் ஏற்கனவே இருக்கும் பிணிகளை போக்கும். ஒரு மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்தும் தன்மை சனி, ராகு – கேது கிரகங்களுக்கு அதிகம் உண்டு.
சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சனி, ராகு – கேது கிரகங்களுக்கு நெய் தீபங்கள் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். தினமும் காலையில் உங்கள் வீட்டிற்கு அருகில் வாழும் நாய்கள், பூனைகள், காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து வந்தால், அப்புண்ணிய செயலின் பலனாக உங்களின் நீண்ட கால நோய்கள் நீங்கி, உடல்நலம் மேம்படும். எதிர்காலங்களில் கொடிய வியாதிகள் ஏற்படமாலும் தடுக்கும்.
English Summary
Will physical health improve through remedy