புளிய மரத்துக்கு கீழே ஏன் படுக்கக்கூடாது என்கிறார்கள்?! - Seithipunal
Seithipunal


பாலைக் காய்ச்சும் பொழுது பொங்குவது ஏன்?

பாலைக் கொதிக்க வைக்கும்போது பாலில் உள்ள கொழுப்பு தனியே பிரிந்து பாலின் மேற்பரப்பில் ஆடையாகப் படியும். ஆடையின் ஊடாக வளிக்குமிழிகள் வெளியேற முடியாமல் தடுக்கின்றது. இதனால் பால் காய்ச்சும் பொழுது பொங்குகின்றது.

புளிய மரத்துக்கு கீழே ஏன் படுக்கக்கூடாது என்கிறார்கள்?

புளிய மரம் இரவில் அதிக கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதனால் புளிய மரத்துக்கு கீழே படுக்கக்கூடாது என்கிறார்கள்.

வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது என்று சொல்ல காரணம் என்ன?

இலையில் 'பினாலிக்ஸ்" எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

நுனி நாக்கில் அமிர்தமும், அடி நாக்கில் விஷமும் விளக்கம் தெரியுமா?

நாக்கில் உள்ள சுவை அரும்புகள் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய நான்கு முதன்மைச் சுவைகளை உணரக்கூடியன. சுவை அரும்புகள் நாக்கில் எல்லா இடங்களிலும் பரந்து காணப்படுவதில்லை. நுனி நாக்கில் இனிப்புச் சுவை வாங்கிக் கலங்கள் அதிகமாகவும், அடி நாக்கில் கசப்புச் சுவை வாங்கிக் கலங்கள் அதிகமாகவும் காணப்படும்.

ஆவி பறக்கும் காபியைக் குடித்த ஒருவர் உடனடியாக உணவின் சுவையை அறிய முடியாதிருப்பது ஏன்?

சுடுபானம் குடிக்கும் பொழுது, அதன் வெப்பம் நாக்கின் சுவை அரும்புகளைப் பாதித்துவிடும். நாக்கில் உள்ள சுவை அரும்புகளே சுவையை அறிய உதவும். இதனால் சுவையரும்புகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக உணவின் சுவையை அறிய முடியாதிருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

why do not lying in tertarant tree


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->