கோகோ கோலாவால் முடியை அலசிய பெண்.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு அழகே கூந்தல் தான் . அவர்கள் தங்கள் கூந்தலை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள இயற்கையாகவும் செயற்கையாகவும் பல விதமான பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சிலர் பீரில் தலை முடியை அலசுவதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது ஒரு பெண் கோகோ கோலா குளிர்பானத்தில் தலை முடியை அலசும் வீடியோ ஒன்று  யூட்யூபில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

கோகோ கோலா குளிர்பானத்தில் தலை முடியை அலசுவதால் நிஜமாகவே நமது தலை முடி பளபளப்பாகிறதா இதனால் நமது கூந்தலுக்கு என்னென்ன நன்மை தீமைகள் இருக்கின்றன என்று பார்ப்போம். 

கோகோ கோலா என்பது ஒரு கார்பனேட்டட் குளிர்பானம் ஆகும். இது கார்பனேட்டட் நீர், கான் சிரப்பு, இயற்கை சுவையூட்டும் முகவர்கள், பாஸ்போரிக் அமிலம் மற்றும் காஃபின் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட  குளிர்பானம்.

இந்த பானத்தை வைத்து நம் தலை முடியை கழுவும் போது அவற்றில் இருக்கக்கூடிய அமிலங்கள் நம் உச்சந்தலையில் படிந்து முடியின் வேருகளை பாதித்துவிடும். இதில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை நமது முடியின் மேற்பரப்பை மறைப்பதால் முடி பளபளப்பாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த குளிர்பானத்தில் நமது கூந்தலுக்கு வலு சேர்க்கக்கூடிய எந்தவித மூலப் பொருட்களும் இல்லை என்பதே உண்மை.

இதில் இருக்கக்கூடிய கார்ன் சிரப் போன்ற மூலப் பொருட்கள் நம் உச்சந்தலையில் படிந்து  தலை அரிப்பு பொடுகு போன்ற உபாதைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட கோகோ கோலாவை கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடியில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அவற்றிலிருக்கும் குளிர்பானத்தை முற்றிலுமாக பிழிந்து எடுத்த பின்னரே ஷாம்பு அல்லது ஹேர் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பயன்படுத்தும் போது  நமது கூந்தல் பளபளப்பாக இருப்பது போல தோன்றும். தலையில் அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் இதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த குளிர்பானத்தை பயன்படுத்தி தலை முடியை கழுவுவதால் தலை முடிக்கு எந்த வித ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இவற்றை வைத்து கழுவும் போது தலைமுடி பளபளப்பாக இருப்பது போல தோன்றும். எனவே நமது உடல் நலனை கருத்தில் கொண்டு இதனை பயன்படுத்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What happens when you use soft drinks like Coca-Cola on your hair


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->