உடல் எடையை எளிதாக குறைக்கும்.. மூலிகை டீ செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு விதமான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், சிலர் கடினமான உடற்பயிற்சி செய்தும் மற்றும் உணவுகளை குறைத்து சாப்பிடுகின்றனர். ஆனாலும் உடல் எடை குறையாமல் சிரமப்படுகின்றனர்.

இதில் இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கக்கூடிய உணவுகளை சேர்த்துக் கொண்டாலே உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அந்த வகையில் உடல் எடையை குறைக்க மஞ்சள், புதினா தேநீரை குடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் ஒரு கப் தண்ணீரை நன்றாக சுடவைத்து. அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் 10 புதினா இலைகளை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் தேன் சேர்த்து 5 நிமிடம் ஆரவைத்து இதமான சூட்டில் குடிக்கலாம். இதனை தினமும் காலை, மாலை என இரு வேலைகளிலும் குடித்தால் உடலில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்கலாம். இதன் மூலம் நமது உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

மஞ்சள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. இது பழங்காலத்தில் இருந்தே கிருமி நாசினியாக பயன்பாடுப்படுகிறது. மேலும் புதினா செரிமானத்தை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weight loss Durmeric mint tea


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->