நீரழிவு நோயை கட்டுபடுத்தும் கீரை.. அசத்தலான கிரேவி..! - Seithipunal
Seithipunal


சோவிக் கீரையானது சதகுப்பை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கீரையானது மார்கழி போன்ற பனிகாலங்களில் கிடைக்கும். உணவு மற்றும் சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் கீரை வகையாகும். 

இந்தக் கீரையில் வைட்டமின் ஏ, சி, டி, ரிபோஃப்ளேவின், மாங்கனீஸ், ஃபோலேட், இரும்பு, தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

இந்தக் கீரையை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம்  நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. நமது செரிமான தன்மையை அதிகரிக்கிறது ரத்த விருத்தி அதிகரிக்கிறது  உடலுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கு உதவி புரிகிறது மேலும் சுவாச தொடர்பான பிரச்சைனைகளுக்கு இருமல் சளி ஆகியவற்றுக்கு தீர்வாக இருக்கிறது.

மேலும் மாதவிடாய் காலங்களில் இந்த கீரையின் சாரை குடித்து  வருவதன் மூலம் இரத்தம் விருத்தியடையவதோடு உடல்வலியும் நீங்குகிறது.

சுவையிலும் சற்றே குறைவில்லாமல் பருப்புடன் சேர்த்து அல்லது இதில் மட்டன் சேர்த்து கிரேவிப் போல் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty gravy tips for diabetes patient


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->