ஹெல்த்தியா சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? அப்ப இந்த வாழைக்காய் சட்னி ட்ரை பண்ணுங்க...! - Seithipunal
Seithipunal


வாழைக்காய் சட்னி 
தேவையான பொருட்கள் :
பொருள்                                          - அளவு
வாழைக்காய்                                    3 
பெரிய வெங்காயம்                        3 
பச்சை மிளகாய்                              3 
தேங்காய்ப்பூ                             கால் கப் 
கறிவேப்பிலை                             ஒரு கொத்து 
சோம்பு                             ஒரு டீஸ்பூன் 
கடுகு                             ஒரு டீஸ்பூன் 
எண்ணெய்                             தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்                            ஒரு டீஸ்பூன் 
மிளகு                             ஒரு டீஸ்பூன் 
தேசிப்புளி                             நெல்லிக்காய் அளவு 
உப்பு                             தேவைக்கேற்ப 


செய்முறை :
முதலில், வாழைக்காயை தோல் நீக்கி இரண்டாக வெட்டவும்.வெங்காயத்தினையும் பச்சை மிளகாயையும், கறிவேப்பிலையினையும் சின்ன சின்னதாக வெட்டவும்.வெட்டிவைத்த வாழைக்காயினுள் மஞ்சள், சிறிதளவு உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு அவிக்கவும்.அவிந்ததும் தண்ணீரை வடித்து எடுத்து வாழைக்காயை நன்றாக குழிக்கரண்டியால் மசிக்கவும்.பின்பு அதனுள் மிளகு, தேங்காய்ப் பூ, அரிந்து வைத்த பச்சை மிளகாயையும், அரைவாசி வெங்காயத்தினையும் சேர்க்கவும்.அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்தவுடன், சோம்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.பின்பு அதனுள் மீதம் உள்ள வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.கடைசியாக இரண்டினையும் ஒன்றாக சேர்த்து கலந்து தேசிப்புளி விட்டு பரிமாறவும்.
தனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், இட்லி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

raw banana chutney


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->