Freedom Fighters : இந்திய தேசியப் படையை நிறுவியவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


ராஷ் பிஹாரி போஸ்:

பிரித்தானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த இந்தியர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இந்திய தேசியப் படையை நிறுவியவரை பற்றிய சிறிய தொகுப்பு..!!

பிறப்பு :

ராஷ் பிஹாரி போஸ் 1886ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மேற்குவங்கத்தில் பிறந்தார்.

கல்வி :

சந்தன் நகரில் தனது கல்வியை முடித்த ராஷ் பிஹாரி போஸ், இளமையிலேயே புரட்சி இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

திருமண வாழ்க்கை :

ராஷ் பிஹாரி போஸ் சொமோ ஐசோ என்பவரது மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

விடுதலை போராட்டத்தில் ராஷ் பிஹாரி போஸின் பங்கு :

ராஷ் பிஹாரி போஸ் புரட்சியாளர் அமரேந்திர சட்டர்ஜியுடன் ஏற்பட்ட நட்பின் விளைவாக யுகாந்தர் புரட்சி இயக்கத்தின் குழு உறுப்பினர் ஆனார்.

முதல் உலகப் போரைப் பயன்படுத்தி, பாரதத்திலிருந்து ஆங்கிலேயரை விரட்ட ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட மக்கள், அமெரிக்காவில் இயங்கிய கதர் கட்சி உதவியுடன், இந்தியாவிலிருந்த ஆங்கிலேயப் படைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் தீட்டினார் ராஷ் பிஹாரி போஸ்.

ரகசிய ஒற்றர்கள் உதவியுடன் கதர் புரட்சியை அறிந்து கொண்ட ஆங்கிலேய அரசு, புரட்சிக்கு முன்னதாகவே கடும் நடவடிக்கை எடுத்து, ஊடுருவலை தடுத்தனர். இதில் ஈடுபட்ட பல முன்னணி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். ராஷ் பிஹாரி போஸஷும் ஜப்பானுக்கு தப்பினார்.

ஜப்பான் சென்ற ராஷ் பிஹாரி போஸ் அங்கு அரசியல் அடைக்கலம் பெற்றார். ஜப்பானில் செயல்பட்ட ஆசிய வலதுசாரி என்ற அமைப்பு தலைவர்களுள் ஒருவரான சொமோ ஐசோ என்பவரது மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஜப்பானின் குடியுரிமையாளராக மாறிய ராஷ் பிஹாரி போஸ் பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

ஜப்பானில் இருந்த மற்றொரு விடுதலை வீரரான ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயருடன் இணைந்து, ஜப்பான் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். பிரதிநிதிகளும், இந்தியப் படை அதிகாரிகளும் ஜப்பானியத் தலைமையுடன் ஒருங்கிணைந்து 1942ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாநாடு நடத்தியது. இந்தியா விடுதலைப் போராட்டத்திற்கு கடல் கடந்த ஆதரவு அளிப்பதாக ராஷ் பிஹாரி போஸ் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக 'இந்திய சுதந்திர லீக்" என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

இந்திய தேசிய ராணுவத்தை மோகன் சிங் என்ற தளபதியின் தலைமையில் 1942ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அமைத்தார் ராஷ் பிஹாரி போஸ். இதுவே முதல் இந்திய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய ராணுவம் மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. படைப் பிரிவுகளுக்கு காந்தி, நேரு, ஆசாத் என பெயர்கள் சூட்டப்பட்டன.

ராஷ் பிஹாரி போஸின் மறைவு : 

இந்திய விடுதலை போரில் ராஷ் பிகாரி போஸ் 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி போரில் கொல்லப்பட்டார். ஜப்பான் அரசு ராஷ் பிகாரி போஸின் வீரத்தை மெச்சி, அவரின் மறைவுக்குப் பின்பு 'ORDER OF RISING SON' என்ற உயர் விருதை வழங்கி சிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rash Bihari Bose History


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->