நீங்கள் வாங்கும் ''கருப்பட்டி'' ஒரிஜினல் தானா? என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


கருப்பட்டி உடலை சுறுசுறுப்பாகவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது .கடைகளில் வாங்கும் கருப்பட்டி கலப்படமா அல்லது கலப்படமற்றதாக உள்ளதா என்பதை கண்டறியும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். 

* முதலில் கருப்பட்டியை வாங்கி கடித்து மெல்லும்பொழுது அதன் சுவை கரிப்பு தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்க வேண்டும். கருப்பட்டியை மெல்லும் பொழுது வாசனை இன்றி சர்க்கரையின் இனிப்பு சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலியான கருப்பட்டி. 

* கருப்பட்டியை உடைத்து பார்த்தால் கருப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும். கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில் சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையிலிருந்து இலக ஆரம்பித்தால் அது போலி கருப்பட்டி. 

* தன்னை மாறாமல் இருந்தால் அது ஒரிஜினல் கருப்பட்டி. கருப்பட்டியை பார்க்கும் பொழுது பளபளவென இல்லாமல் இருந்தால் அது கலப்படமற்ற கருப்பட்டி. மாவு போல தொட்டால் வெள்ளை வெள்ளையாக ஒட்டினாள் போலி கருப்பட்டி. 

* முதிர்ந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பக்கத்தை நுகர்ந்து பார்த்து போலியானதா இல்லையா என்பதை கண்டறிவார்கள். வாங்கும் கருப்பட்டியின் அடிப்பகுதியை தரையில் தட்டி பார்க்கும் பொழுது மிதமான சத்தம் கேட்டால் அது போலி கருப்பட்டி இல்லை. சத்தம் அதிகமாக கேட்டால் அது போலி கருப்பட்டி. 

* ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டி துண்டை போடும் பொழுது முழுமையாக கரைய சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால் போலி கருப்பட்டி அரை மணி நேரத்தில் கரைந்து விடும். கருப்பட்டியின் மேல் புறம் வெள்ளை நிறத்தில் புள்ளி புள்ளியாக மாற்றம் ஏற்பட்டால் அது ஒரிஜினல் கருப்பட்டி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Original Karupatti Find Easy Method


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->