அற்புதமான குணங்கள் கொண்ட நார்த்தங்காய் ஊறுகாய்..!
narthangai pickle
பண்டைய கால உணவுமுறை என்பது மிகவும் சத்தானது, அலாதியானதும் கூட. பல வகையான காய்கறிகள், கீரைகள் என குழம்பு, கூட்டு, பொரியல் என சமைக்கப்படும். அவர்களின் உணவு ஈடான சைடிஸ்களும் இடம் பெற்றிக்கும். அந்த உணவுமுறையை பின்பற்றியே நாம் இன்று இந்த உணவுக்கு இந்த சைடிஸ் அந்த உணவுக்கு அந்த சைடிஸ் என உணவுகளை சமைத்து சாப்பிடுகிறோம். அப்படி நம் முன்னோர்களின் உணவில் முக்கிய இடம்பிடித்த ஒன்றுதான் ஊறுகாய்.
ஊறுகாய் உலகின் பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியர்களுக்கு தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்றால், வட இந்தியர்கள் சப்பாத்திக்கு ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கிடைக்கும் அனைத்து வகை காய்களிலும் ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஊறுகாய்களில் இன்னொரு முக்கியமான ஒன்று நார்த்தங்காய் ஊறுகாய். பொதுவாக நார்த்தங்காய், எலுமிச்சை வகையை சார்ந்தது. இதன் பழங்கள் அளவில் பெரியதாக காணப்படும். நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இது புளிப்பு சுவை மிகுந்தது. ஆனால், நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். இது 'கிராம மக்களின் சாத்துகுடி" என அழைக்கப்படுகிறது.
பயன்கள் :
தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாற்றை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.