தினமும் 15 நிமிடங்கள் 'இப்படி' நடந்தால் போதும்..உடல் எடை குறையும்..நீண்ட ஆயுள் கிடைக்கும்!
Just walking like this for 15 minutes every day will help you lose weight and live a long life
உடல்நலனுக்காக நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. பொதுவாக மெதுவாக நடப்பதும் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும். ஆனால், தினமும் 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக (வேகமாக) நடப்பதால், உடலுக்கு பல அதிசய நன்மைகள் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அறிவியல் ஆராய்ச்சிகளின் படி, மெதுவாக நடப்பதை விட சுறுசுறுப்பான நடை அகால மரணம் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. குறிப்பாக, தினமும் 15 நிமிடங்கள் வேகமாக நடந்தால், அகால மரண அபாயம் சுமார் 20% குறையும் என தெரியவந்துள்ளது.
சுறுசுறுப்பான நடைபயிற்சி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைந்து, இதய ஆரோக்கியம் வலுப்பெறும்.
வேகமாக நடப்பது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்புகளை குறைக்கிறது.நடைபயிற்சியால் அதிக கலோரி எரிந்து, வளர்சிதை மாற்றம் சுறுசுறுப்பாகி எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது.
வேகமான நடைபயிற்சி, மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல், படைப்பாற்றல், சிந்தனை திறன் மேம்படும். மேலும், குறுநடைகள் எண்டோர்பின் சுரப்பை தூண்டுவதால் மனநிலை சீராகி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறையும்.
தினமும் 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடந்தால், ஆயுட்காலம் நீடித்து ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் பல நோய்களை தடுப்பதோடு, இதயம், நுரையீரல் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால், நடைபயிற்சி மட்டும் போதாது. சீரான உணவு பழக்கம், நல்ல தூக்கம், புகைப்பிடித்தல் மற்றும் மதுவை தவிர்த்தல் ஆகியவற்றுடன் இணைந்தால் தான் நீண்ட ஆயுள் பெற முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
English Summary
Just walking like this for 15 minutes every day will help you lose weight and live a long life