அயர்ன் பாக்ஸில் கறையா...? உப்பு இருந்தால் போதும்.....! - நிமிடத்தில் புதுசு போல ஜொலிக்கும்...! - Seithipunal
Seithipunal


அவசர நேரங்களில் அலுவலகம் அல்லது விழாக்கால நிகழ்ச்சிகளுக்காக உடைகளை விரைவாக அயர்ன் செய்யும்போது, சில நேரங்களில் அதிக வெப்பம் காரணமாக துணிகள் கருகி அயர்ன் பெட்டியின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொள்வது வழக்கமாகி விடுகிறது. அந்த கருப்பு பிசுபிசுப்பான கறைகளை உடனே சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், அடுத்த முறை தேய்க்கப்படும் நல்ல உடைகளும் கறைபடிந்து சேதமடையும் அபாயம் உருவாகிறது.

இந்த கறைகளை அகற்ற பலர் கூர்மையான பொருட்களால் சுரண்ட முயற்சிப்பார்கள். ஆனால் அப்படி செய்வதால் அயர்ன் பெட்டியின் பாதுகாப்பு பூச்சு சேதமடைந்து, அதன் செயல்திறனே குறைந்து விடும். வீட்டிலேயே இருக்கும் எளிய இரண்டு பொருட்களை பயன்படுத்தி எந்தச் செலவும் இல்லாமல் அயர்ன் பெட்டியை புதிதுபோல் பளபளப்பாக்கும் எளிய முறையை தெரிந்துகொள்ளலாம்.

முதலில் சமமான மேசை அல்லது தரையில் பழைய தடிமனான துணி ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். அதன் மேல் அலுமினியத் தகட்டை பரப்பி வைக்கவும். பின்னர் அதன்மேல் இரண்டு கரண்டி அளவு தூள் உப்பை சமமாக தூவ வேண்டும்.அதன்பிறகு அயர்ன் பெட்டியை அதிக வெப்ப நிலையில் இயக்க வேண்டும்.

நீராவி வசதி இருந்தால் அதை அணைத்துவிடுவது அவசியம். அயர்ன் பெட்டி நன்றாக சூடானதும், அதை உப்பின் மேல் மெதுவாக முன்–பின் நகர்த்தி தேய்க்க வேண்டும்.

சில நிமிடங்களில் உப்பின் சொரசொரப்புத் தன்மை காரணமாக கருகிய கருப்பு கறைகள் மெதுவாக உரிந்து நீங்கத் தொடங்கும்.அலுமினியத் தகடு வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்வதால், ஒட்டிக்கொண்ட கறைகள் விரைவாக தளர்ந்து விடுகின்றன. அனைத்து கறைகளும் நீங்கியதும் அயர்ன் பெட்டியை அணைத்து முழுமையாக ஆற விட வேண்டும்.

பின்னர் ஈரமான மென்மையான துணியால் அடிப்பகுதியை துடைத்தால் போதும்.இதன் பிறகு உங்கள் அயர்ன் பெட்டி, புதிதாக வாங்கிய சாதனம்போல் பளிச்சென மின்னி, உடைகளை எந்தக் கறையும் இல்லாமல் சீராக அயர்ன் செய்ய உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there stain iron box All you need salt It shine like new minute


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->