சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா.? இதை ட்ரை பண்ணி பாருங்க.!
How to reduce blood sugar
பொதுவாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இயற்கை மருத்துவத்தை பின்பற்றி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எளிமையான உணவு முறைகளை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அதன்படி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நமது வீட்டிலேயே உள்ள ஒரு சில உணவுப் பொருட்களை வைத்து கட்டுப்படுத்த முடியும். அதன்படி இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அந்த ஊற வைத்த நீரை வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு குறையும்.

மேலும் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து குடித்தால் சர்க்கரை அளவு குறையும்.
அதேபோல், வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவை குறைக்கலாம். வெண்டைக்காய் பொதுவாக ஞாபக சக்தியை அதிகரித்தாலும், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

அதன்படி வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பான பகுதி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் 3 அல்லது 4 வெண்டைக்காயை துண்டு துண்டாக வெட்டி போட வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரை குடித்தால் சர்க்கரை அளவு குறையும்.
English Summary
How to reduce blood sugar