பாசிபருப்பில் இட்லி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.!!
how to make pasiparuppu idly
பாசிபருப்பில் இட்லி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.!!
பொதுவாக இட்லி என்றால் அனைவரும் புழுங்கல் அரிசியில் உளுந்து கலந்து தான் செய்வார்கள். அது சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அதனால், அவர்களுக்கு புதுவிதமாக பாசிப்பருப்பை வைத்து இட்லி செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருள் :-
பாசிப்பருப்பு
இட்லி அரிசி
சிவப்பு மிளகாய்
கறிவேப்பிலை
தனியா
சீரகம்
சின்ன வெங்காயம்
உப்பு

செய்முறை:-
முதலில் பாசிப்பருப்பையும், இட்லி அரிசியையும் கழுவிவிட்டு ஊற வைக்கவும். அது நன்றாக ஊறிய பின்னர் கறிவேப்பிலை, தனியா, சீரகம், சின்ன வெங்காயம், உப்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
இட்லி மாவு பதத்திற்கு அரைத்து அதனை இட்லி தட்டில் ஊற்றி வெந்தவுடன் இறக்கவேண்டும். இப்போ சூடான சுவையான, பாசிப்பருப்பு இட்லி தயார். இதனுடன் தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும்.
English Summary
how to make pasiparuppu idly