வீட்டிலேயே குங்குமத்தை எப்படி செய்யலாம்? - வாங்க பார்க்கலாம்?
how to make kungumam in house
பூஜை பொருட்களில் மிக முக்கியமானது குங்குமம். அதுமட்டுமல்லாமல், பெண்களின் வாழ்க்கையிலும் இது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இதனால், இந்த குங்குமத்தை கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
செய்முறை:-
* முதலில் மூன்று தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒன்றரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, அரை தேக்கரண்டி சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை கெட்டியாக இருக்கும் பதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.
* அரைத்த குங்குமத்திற்கு நல்ல சிவப்பு நிறம் வேண்டுமென்றால், அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைக்கலாம். இப்போது, குங்குமம் தயாராகவுள்ளது.
* இந்த குங்குமத்தை ஒரு சிறிய கொள்கலனில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இது இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.
English Summary
how to make kungumam in house