இதெல்லாம் தெரியாமல் உடற்பயிற்சி செய்யாதீங்க.. இவ்வளவு விஷயம் இருக்குதா.?! - Seithipunal
Seithipunal


உடற்பயிற்சி என்பது  நம் ஆரோக்கியத்திற்காக நாம் செய்கின்ற சிறந்த செயலாகும். உடற்பயிற்சியின் மூலம் நமது உடலும் மனமும்  வலுப்பெறுகிறது. இந்த மாதிரியான உடற்பயிற்சிகள் இருக்கின்றன அவற்றால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

உடற்பயிற்சியின் வகைகள் :

உடற்பயிற்சிகளை பொதுவாக  நம் உடல் எடையை பயன்படுத்தி  செய்யக்கூடிய  பாடி வெயிட் ட்ரெயினிங் பயிற்சிகள் மற்றும் உபகரணங்களை  பயன்படுத்தி செய்யக்கூடிய பயிற்சிகள் என  இரு வகைகளாக பிரிக்கலாம். இவை தவிர ஏரோபிக், வலிமை, கலிஸ்தெனிக்ஸ், எச்ஐஐடி, நெகிழ்வுத்தன்மை மற்றும் நிலைத்தன்மை போன்று நமது தேவைகளுக்கு ஏற்ப  பயிற்சி முறைகளும் உள்ளன .

பாடி வெயிட் பயிற்சிகள் :

பாடி வெயிட் பயிற்சிகள் எந்த உபகரணங்களின் துணையின்றி  நம் வீட்டிலேயே நம் உடல் எடையை பயன்படுத்தி செய்யக்கூடிய பயிற்சிகள் ஆகும். தண்டால் மற்றும் புல்லப்ஸ் போன்றவை  இதில் அடங்கும். இந்த பயிற்சிகள் நம் உடலை வலுவாக்குவதற்கும்  நம் உடல் எடை குறைப்பிற்கும்  பிட்டாக வைத்துக் கொள்வதற்கும் உதவுகின்றன .

ஏரோபிக்ஸ் பயிற்சிகள்:

ஏரோபிக்ஸ் பயிற்சிகளும்  உபகரணமின்றி நம் வீட்டிலேயே செய்யக்கூடிய வகை பயிற்சிகளாகும். இந்த  பயிற்சிகள்  கார்டியோ வாஸ்குலார் என அழைக்கப்படும்  இதயம் மற்றும் இதயம் சார்ந்த தசைகளுக்கு வலு சேர்க்கக் கூடியவை. மேலும் இந்த பயிற்சிகள் நம் உடலுக்கு அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதற்கும் நமது ரத்த ஓட்டம் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதற்கும் உதவுகின்றன. நீச்சல் ஸ்கிப்பிங்  நடைப்பயிற்சி  நடனம் மற்றும் நம் கை கால்கள் உடல் அசைவுகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பயிற்சிகள் இதில் அடங்கும்.

வெயிட் லிப்டிங் மற்றும் பாடி பில்டிங் :

இவ்வகையான உடற்பயிற்சிகளை பாடி பில்டிங் துறையில் ஈடுபடுபவர்களும்  விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்களும் தங்களின் உடல் வலிமை மற்றும் உடலமைப்பிற்காக எடைகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பயிற்சிகள் ஆகும். இவற்றிற்கு முறையான பயிற்சியும்  வழிகாட்டுதலும் அவசியம் .

உடற்பயிற்சியின் போது பின்பற்ற வேண்டிய முறைகள் :

எந்த வகையான உடற்பயிற்சியாக இருந்தாலும்  சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள்  இரவு கட்டாயம் 6-7 மணி நேரத்திற்கு  உறங்குவது அவசியம். மேலும் நல்ல சத்தான புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பின் உடனடியாக உடற்பயிற்சிகளில் ஈடுபடக் கூடாது. மேலும் சரியான தூக்கம் இன்மை மற்றும் உடல் சோர்வாக உணர்கின்ற நேரங்களில்  உடற்பயிற்சிகளை தவிர்த்துக் கொள்வது நலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Explanation and types of exercise


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->