சர்க்கரை வள்ளி கிழங்கில் கொட்டி கிடக்கும் மருத்துவ பலன்கள்! - Seithipunal
Seithipunal


சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். இதில் வைட்டமின் பி-6 அதிகமாக உள்ளதால், இது செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது.

மேலும் இது இதய நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கிறது.  ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ள சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கவும் இது உதவுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது, இது உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது. இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. 

தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி மிகவும் அவசியமாகும். ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு இது உறுதுணையாக இருக்கிறது.

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது.  இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. மேலும் புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து , சுட வைத்து அல்லது சிப்ஸ் தயாரித்து சாப்பிடலாம். சுவையாகவும் இருக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

enormous nutrients are there in sweet potato


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->