முட்டையை வைத்து உங்கள் அழகை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் தெரியுமா...?
Do you know how you can improve your beauty using eggs
முகம் பளிச்சிட:
முதலில், ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

தேவையற்ற முடிகளை அகற்ற:
ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப் பகுதியில் தடவி 20-25 நிமிடம் கழித்து உரித்து எடுக்கவும்.இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்க:
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.பின்பு ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 40-45 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலையை அலசுங்கள்.இந்த மாஸ்க்கினால் தலைமுடியின் மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்கும்.
English Summary
Do you know how you can improve your beauty using eggs