தர்பூசணி சாட்...எப்படி போடுவது தெரியுமா...?
Do you know how to make watermelon chat
தர்பூசணி சாட்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
தர்பூசணி அரை கிலோ
தயிர் அரை கப்
புதினா விழுது அரை டீஸ்பூன்
தக்காளி ஜூஸ் அரை கப்
மிளகுப் பொடி 1 சிட்டிகை
உப்பு 1 சிட்டிகை
தேன் 2 டீஸ்பூன்
லவங்கப் பட்டை பொடி 1 டீஸ்பூன்

செய்முறை :
முதலில்,தர்பூசணியை விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைத்த பின் அதனை வடிகட்டி கொள்ளவும்.அதன் பிறகு வடிகட்டிய தர்பூசணி, தயிர், புதினா விழுது, தக்காளி ஜூஸ், மிளகுப் பொடி, உப்பு, தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு பரிமாறும் போது லவங்கப் பட்டை பொடியைத் தூவி பரிமாறவும். இப்போது தர்பூசணி சாட் தயார்.
English Summary
Do you know how to make watermelon chat