செம்பு பாத்திரம் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


* பொதுவாக செம்பு பாத்திரம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகுவதால் அதில் உள்ள செம்பு தாது தண்ணீரில் கலந்து உடலுக்குள் சென்று ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

* உடல் வலிமையுடன் இருக்கும். செம்பு எனப்படும் காப்பர் ரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது. செம்பு பாத்திரத்தை நாம் பயன்படுத்தும் போது உடல் உறுப்புகள் சீராகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கும். 

* செம்பு கலந்த நீரை பருகுவதால் எலும்பு உறுதி பெறும். குழந்தைகள் மற்றும் பெண்கள் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் ரத்த சோகை பிரச்சனை வராமல் இருக்கும். 

* ரத்த புற்று நோய் போன்ற ரத்தம் சார்ந்த நோய்களும் வராது. கர்ப்பிணி பெண்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடிப்பதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கும். 

* செம்பு பாத்திரத்தில் உணவு செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும். முந்தைய காலங்களில் பெண்கள் திருமணம் செய்து அனுப்பும்பொழுது செம்பு பாத்திரங்களை கொடுத்து அனுப்புவார்கள். 

* குடிநீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்றவற்றை சேர்த்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு முந்தைய காலங்களில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் கொடுப்பார்கள். 

* இது குழந்தையின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பிரச்சினைகளையும் தடுக்கும். செம்பு பாத்திரத்தை துலக்கும் போது சோப்பு கொண்டு சுத்தம் செய்யாமல் அடுப்பு சாம்பல், புளி போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

copper vessel many benefits in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->